தமிழ் திரையுலகை பொருத்தவரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு சினிமாவை கலக்கிய நடிகர் நடிகைகள் எத்தனையோ பேர் உள்ளனர். அப்படி சிறுவயது கதாபாத்திரங்களில் நடித்த பிரபலங்களின் புகைப்படங்கள் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதன்படி தான் பிரபலம் ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்றைய காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமா உலகில் நாயகர்களின் பிளாஷ்பேக்கில் அவர்களுடைய முக சாயலை ஒத்த குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பது இயல்பான ஒன்றுதான்.

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் பிரபல டாப் ஹீரோக்களின் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாஸ்டர் சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளமைப் பருவத்து குட்டி ரஜினிகாந்த் ஆக நடித்து புகழ்பெற்றவர் தான் இந்த மாஸ்டர் சுரேஸ். ரஜினியின் படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினி ஆக நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் கமல், விஜயகாந்த், பிரபு மற்றும் சிரஞ்சீவி மட்டுமல்லாமல் பாலிவுட் உலகின் முன்னணி நடிகர்களான அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார்.
![]()
இதுவரை இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபல நடிகை சுஜிதாவின் சகோதரர் ஆவார். சுஜிதாவும் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கே. பாக்யராஜின் மௌன கீதங்கள் திரைப்படத்தில் டாடி டாடி ஓ மை டாடி என்ற பாடலில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் மாஸ்டர் சுரேஸ். இவருடைய இயற்பெயர் சூரிய கிரன்.

பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தன்னுடைய தந்தை சுஜிதா உடன் இணைந்து நடித்திருப்பார். சிறுவயதிலேயே நடிப்பில் ஊறிப்போன இவர் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரவி தேஜாவிடம் ஸ்கிரிப்ட் ரைட்டிங் கற்றுக் கொண்டுள்ளார். இவர் சமுத்திரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்த காவிரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய மாஸ்டர் சுரேஷ் கடந்த 2024 ஆம் ஆண்டு திடீரென இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். அவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
