களத்தூர் கண்ணம்மா ஷூட்டிங்கில் சாப்பிட மறுத்த குழந்தை கமல்.. அதுக்கு என்ன காரணம் சொன்னார் தெரியுமா?

By vinoth on மாசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நான்கரை வயது இருக்கும் போது அவர் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி என்ற இரு பெரும் ஆளுமைகள் இருந்த போதும் கமல்ஹாசன் என்ற அந்த குழந்தையின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

   

படம் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் எல்லாம் அவரை அழைத்துக் கொண்டு காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்திய சம்பவமும் நடந்தது. அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் பி முத்துராமன் குழந்தை பருவத்திலேயே கமல்ஹாசன் சினிமாவின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு சிறப்பாக அந்த படத்தில் நடித்தார் எனக் கூறியுள்ளார்.

   

ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் சாவித்ரி கமல்ஹாசனுக்கு ஊட்டிவிடுவது போன்று எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். சாவித்ரி அவருக்கு உப்மா ஊட்டிவிட்டுள்ளார். ஆனால் அதை கமல்ஹாசன் சாப்பிடவில்லையாம்.

 

அதையடுத்து அவரை தனியாக அழைத்து ஏன் சாப்பிட மறுக்கிறாய் எனக் கேட்டுள்ளனர். அதற்கு சிறுவனான கமலஹாசன் “நான் இங்கு வந்ததில் இருந்து பார்க்கிறேன். மாமரத்தில் மாம்பழம் போல தொங்குவது எல்லாம் ஒரிஜினல் மாம்பழமே இல்லை. அதே போல இங்கு போட்டிருக்கும் நாற்காலி மேஜை கூட உண்மையில்லை. எல்லாமே டூப்பாக இருக்கிறது. அதுபோல இந்த உப்மாவும் டூப்பாக இருக்கும்” எனக் கூறினாராம்.

இதைக் கேட்டு படக்குழுவினர் அனைவரும் சிரித்துள்ளனர். அதன் பின்னர் அது உண்மையான உப்மாதான் என உறுதியளித்த பின்னர்தான் அந்த காட்சியில் சாப்பிடுவது போல நடித்தாராம்.