சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2026

Spread the love

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து பிரம்மாண்டமான அளவில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மருத்துவ விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

28 வயதே ஆன இளம் பெண் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது கர்ப்பப்பையில் ராட்சத அளவில் நார்திசுக்கட்டி வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அது வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான கட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/Eqraaam/status/2115085013704458639?a=xI3igjO0R7oc13pTXEs&s=20

   

பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே இத்தகைய கட்டிகள் உருவாகும் என்று கருதப்பட்ட நிலையில், தற்போதைய நவீன உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் 20-களின் பிற்பகுதியிலேயே பெண்களுக்கு இத்தகைய பெரிய கட்டிகள் உருவாவது அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “ஆரம்பக் கட்டத்திலேயே ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் முறையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம்” என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், இச்சம்பவம் இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.