அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 29, 2026

Spread the love

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சங்கடமான சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்புபவர்களுக்காக, ஊதியம் வழங்காத முதலாளிகளிடம் பேசுவது முதல் சேவைக் குறைபாடுகள் வரை அனைத்து வகையான நியாயமான கோரிக்கைகளுக்காகவும் இவர் குரல் கொடுக்கிறார்.

இந்தச் சேவையைப் பெற அவர் 188 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600) கட்டணமாக வசூலிக்கிறார். மேலும், எந்தவிதமான நேரக் கட்டுப்பாடுகளும் இன்றி, வாடிக்கையாளர்களின் பிரச்சனை முழுமையாகத் தீரும் வரை அல்லது அவர்கள் திருப்தி அடையும் வரை அந்த விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வழக்காடுவது இவரின் சிறப்பம்சமாகும்.

   

https://www.instagram.com/reel/DezCwCgMQ42/?utm_source=ig_web_button_share_sheet

   

சமூக வலைதளங்களில் பரவி வரும் இவரின் இந்த விசித்திரமான சேவைக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலான தருணங்களைச் சுட்டிக்காட்டி, தங்களின் சார்பாகப் பேச இந்த நபரைத் தங்கள் நாடுகளுக்கும் வரவழைக்க விரும்புவதாக வேடிக்கையாகவும் ஆச்சரியமாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.