கேஸ் சிலிண்டர் லீக் ஆகி பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிர் பிழைத்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் எல்பிஜி சிலிண்டர் லீக் ஆகியுள்ளது. அதை கட்டுப்படுத்த பெண் ஒருவர் அந்த குழாயினை இருக்க முயற்சி செய்து அவரால் தடுக்க முடியவில்லை. அதனால் அவர் அதை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடுகிறார். சில நிமிடங்களில் அந்த பெண் ஒருவர் ஆணோடு மீண்டும் அந்த இடத்திற்கு வருகிறார். இரண்டு பேரும் வேறு வேறு வாசல்கள் வழியாக வீட்டிற்குள் செல்கிறார்கள். கேஸ் கசிவு ஓரளவுக்கு நின்று விட்டது .அப்போது இருவரும் அதை தூக்கும் பொழுது ரூம் முழுவதும் வாயு நிறைந்திருந்த காரணத்தால் திடீரென்று சமையலறையில் இருந்து தீப்பற்றி எரிந்து வீடு முழுவதும் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுகிறது.
ஆனால் வீடு முழுவதும் வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் திறந்து இருப்பதால் வாய் வெளியேறி தீயின் தாக்கம் குறைந்தது. இதனால் அந்த நேரத்தில் அந்த பெண் மற்றும் ஆண் இருவரும் தீயில் சிக்காமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார்கள். இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ஜன்னல்கள் திறந்து இருப்பது ஒரு பெரிய பலனாக அமைந்தது என கருத்து தெரிவித்தார்கள் . இந்த வீடியோ சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டு வருகிறது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…