உஷார் மக்களே..! கேஸ் சிலிண்டர் லீக்கால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… ஜன்னல் திறந்திருந்தால் உயிர்பிழைத்த 2 பேர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

கேஸ் சிலிண்டர் லீக் ஆகி பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிர் பிழைத்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் எல்பிஜி சிலிண்டர் லீக் ஆகியுள்ளது. அதை கட்டுப்படுத்த பெண் ஒருவர் அந்த குழாயினை இருக்க முயற்சி செய்து அவரால் தடுக்க முடியவில்லை. அதனால் அவர் அதை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடுகிறார். சில நிமிடங்களில் அந்த பெண் ஒருவர் ஆணோடு மீண்டும் அந்த இடத்திற்கு வருகிறார். இரண்டு பேரும் வேறு வேறு வாசல்கள் வழியாக வீட்டிற்குள் செல்கிறார்கள். கேஸ் கசிவு ஓரளவுக்கு நின்று விட்டது .அப்போது இருவரும் அதை தூக்கும் பொழுது ரூம் முழுவதும் வாயு நிறைந்திருந்த காரணத்தால் திடீரென்று சமையலறையில் இருந்து தீப்பற்றி எரிந்து வீடு முழுவதும் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுகிறது.

ஆனால் வீடு முழுவதும் வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் திறந்து இருப்பதால் வாய் வெளியேறி  தீயின் தாக்கம் குறைந்தது. இதனால் அந்த நேரத்தில் அந்த பெண் மற்றும் ஆண் இருவரும் தீயில் சிக்காமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார்கள். இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ஜன்னல்கள் திறந்து இருப்பது ஒரு பெரிய பலனாக அமைந்தது என கருத்து தெரிவித்தார்கள் . இந்த வீடியோ சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டு வருகிறது.