சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதன் உச்சத்திலிருந்து சுமார் 20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,602 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது அது 4,495 டாலர் என்ற நிலைக்குக் குறைந்துள்ளது.
மேலும் வலுவான அமெரிக்க டாலர் மதிப்பு, உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை முதலீட்டாளர்களைத் தங்கம் வாங்குவதிலிருந்து பின்வாங்கச் செய்துள்ளன. சந்தை நிபுணர்களின் கணிப்புப்படி, தங்கம் தற்போது ‘பியர் மார்க்கெட்’ எனப்படும் சரிவுப் பாதைக்குள் நுழைந்துள்ளதால், வரும் காலங்களில் இதன் விலை இன்னும் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகின்றனர்.
இதனால் வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, தங்கம் பெரும் விலை உயர்வுக்குப் பிறகு கணிசமான சரிவைச் சந்திப்பது வழக்கம். உதாரணமாக, 1970-களிலும் 2011-2015 காலக்கட்டத்திலும் தங்கம் 40 சதவீதத்திற்கும் மேலாகச் சரிவைக் கண்டிருந்தது. தற்போது நிலவும் பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வட்டி விகிதங்கள் அதிகமாகவே நீடிக்கும் என்பதால், வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான மோகம் குறைந்து வருகிறது.
இருப்பினும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையலாம் என்றும், குறுகிய கால முதலீட்டில் அதிக அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தின் அளவை 10-15 சதவீதமாகக் கட்டுப்படுத்துவது பாதுகாப்பானது என பரிந்துரைக்கப்படுகிறது.
