விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) உத்தரவிட்டுள்ளார். இதன்படி, விழுப்புரம் மாவட்ட IT விங் செயலாளர் S.கோகுல்ராஜ், இணைச் செயலாளர் SP பாலாஜி, புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் சத்தி பெரியதம்பி மற்றும் கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய IT விங் செயலாளர் SP சேதுபதி ஆகியோர் தங்களது கட்சிப் பொறுப்புகளில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, சேலம் மண்டல IT விங் செயலாளர் பொறுப்பில் இருந்து KRD தினேஷ் பாலாஜியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
