நெட்டிசன்களைக் கவர்ந்த ‘சூட்-பூட்’ செஃப்.. 19 வயது சீன இளைஞரின் மாஸ் பிசினஸ்..! ஒரே ஒரு ஐடியாவால் மாறிய வாழ்க்கை…!!

Spread the love

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாய் நகரின் இரவு சந்தையில், 19 வயது இளைஞரான ‘லூ’ (Lu) என்பவர் விற்கும் ஃபிரைடு ரைஸ் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது. பொதுவாக தெருவோர வியாபாரிகள் சாதாரண உடைகளையே அணிவார்கள். ஆனால், இந்த இளைஞர் முறையான கோட்-சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக ஃபிரைடு ரைஸ் சமைத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறார். கூட்டத்தில் தான் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக, தனது 17 வயதில் தொடங்கிய இந்த உணவுக் கடையில் அவர் புகுத்திய இந்த வித்தியாசமான பாணி, அவரை ஒரே இரவில் இணைய உலக நட்சத்திரமாக மாற்றியுள்ளது.

லூ வெறும் உணவை மட்டும் சமைப்பதில்லை, மாறாக அதை ஒரு கலை நிகழ்ச்சியைப் போல மாற்றியுள்ளார். அதிவேகமாக கடாயைச் சுழற்றுவது, சமைக்கும் போது கேமராவைப் பார்த்து கண் சிமிட்டுவது, காற்றில் முட்டையைத் தூக்கிப் பிடிப்பது என சீன செஃப்களைப் போல பல ஸ்டைலான சமையல் அசைவுகளை வெளிப்படுத்துகிறார். இந்தத் தனித்துவமான பாணியை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்து வருவதால், அவருக்கு ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் உருவாகியுள்ளனர். தற்போது அவரது கடை வெறும் உணவு உண்ணும் இடமாக மட்டுமல்லாமல், மக்களைக் கவரும் ஒரு பொழுதுபோக்கு மையமாகவும் மாறியுள்ளது.

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11:30 மணி வரை செயல்படும் இவரது கடையில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட ஃபிரைடு ரைஸ் தட்டுகளை விற்கும் இவர், இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் 50,வாண யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய்) வரை வருவாய் ஈட்டுகிறார். அனைத்துச் செலவுகளும் போக மாதத்திற்கு 20,000 யுவான் (சுமார் 2.3 லட்சம் ரூபாய்) லாபமாகச் சேமிக்கும் லூ, இவ்வளவு சிறிய வயதிலேயே தனது குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டும் நபராக மாறியுள்ளார். இவருக்கு உதவியாக இவரது தந்தையும் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago