சேலம் மாநகரப் பகுதிகளில் சமீப நாட்களாக இருசக்கர வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாகிர் ரெட்டிப்பட்டியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொறியாளர் சந்தோஷ் என்பவர் தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த நிலையில், மறுநாள் காலை அது காணாமல் போயிருந்தது.
சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பெற்று ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில், நள்ளிரவில் முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் சந்தோஷின் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்தக் காணொளியில், இளைஞர்கள் முகமூடி அணிந்துகொண்டு சாலையில் நடந்து வந்து, நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை எடுக்க முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து, அவர்கள் யார், எங்கிருந்து வந்தனர், அவர்களுக்குத் தொடர்புள்ள நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…