“திருமணம் நின்று விட்டது”… இன்ஸ்டாவில் அறிவித்த ஸ்மிருதி மந்தனா… அவரே கொடுத்த விளக்கம்…!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இந்திய அணி மகளிர் உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் 29 வயதாகும் நிலையில் பிரபல இசை அமைப்பாளர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாலேஷ் முச்சா என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

   

இவர்களின் திருமணம் கடந்த 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. மந்தனாவின் தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது திருமணம் தொடர்பான வதந்திக்கு மந்தனா விளக்கமளித்துள்ளார்.

   

அதில், கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புபவள் நான் கிடையாது. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதை மட்டும் தெளிவு படுத்திக் கொள்கிறேன். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஸ்மிருதி மந்தனா instagram-யில் பதிவிட்டுள்ளார்.