பேனர் வைப்பதில் வந்த தகராறு… நள்ளிரவில் காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டம் கமலேஷ்வரா பகுதியை சேர்ந்த கணேஷ் கவுடா (38) என்பவர் காங்கிரஸ் நிர்வாகியாக உள்ளார். இவர் அப்பகுதி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கணேஷ் கவுடா நேற்று இரவு கமலேஷ்வரா பகுதியில் உள்ள சாலையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேஷ் கவுடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறு கணேஷை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.