ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யும்போது பெற்றோர்கள் அவசியம் இல்லை.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

சார்பதிவாளர் அலுவலகங்களில் திருமணம் செய்யும்போது பெற்றோர் கட்டாயம் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். திருமணப் பதிவின்போது பெற்றோர் நேரில் வர வேண்டும் என்றோ, அல்லது அவர்களின் அசல் ஆவணங்களைக் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்றோ எந்தவொரு விதியும் நடைமுறையில் இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் தம்பதியினரை அவ்வாறு வற்புறுத்திக் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக அது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பதோடு திருமணப் பதிவு நடைமுறைகளை எளிதாக்க உதவும் என்று பொதுமக்கள் தரப்பில் வரவேற்கப்படுகிறது.