நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 8- ஆம் தேதி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பு திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள் மட்டுமில்லாமல் ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி அளித்த பேட்டியில் எனது கணவர் இறப்பிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். யார் என்று தெரியாத ஒருவர் கூட எங்கள் மீது அக்கறை காட்டுவது தான் எனது கணவர் சேர்த்து வைத்த பெருமை.
என் கணவருக்கு குடும்பம் தான் எல்லாமே. நானும் எனது இரண்டு பிள்ளைகளும் தான் அவருக்கு எல்லாமே என பேசியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி அளித்த பேட்டியில் கூறியதாவது, எல்லாருமே கூறுவது நாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டில் ஒரு நாளாவது என் கணவர் வாழ்ந்திருக்கலாம் என்பதுதான்.
இப்போதும் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு செங்கல்லிலும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது அந்த வீட்டிற்கு சென்று வருவார். வீட்டை எப்படி எல்லாம் கட்ட வேண்டும் என கனவுகளோடு காத்துக் கொண்டிருந்தார் என உருக்கமாக பேசியுள்ளார்.