தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் தற்போது கூலி படத்தில் இருந்து வெளியான மோனிகா பாடல் கொடுத்து தன்னுடைய கருத்துக்களை கூறியுள்ளார். மோனிகா பாடலின் இசை ,வீடியோ மற்றும் அதில் உள்ள நடன காட்சிகள் பலருடைய மனதையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பல கருத்துக்களை எழுப்பியுள்ளார்.
அதாவது 50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்ணை ஆட வைக்கும் சினிமாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். 50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் ஆடும் பொழுது ஏன் தடுத்து நிறுத்தவில்லை? ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடினால் அது காதல். சுற்றி பல ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் ஆடுவதை எப்படி புரிந்து கொள்வது? என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
