தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சேர்க்கை விவகாரம், தற்போது அதிமுக மற்றும் தவெக இடையே நேரடி வார்த்தை மோதலாக வெடித்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் பேசிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தான் தவெகவில் இணைவதற்காக ரூ.50 கோடி வாங்கியதாக அதிமுகவினர் பரப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “என் மீது பழி சுமத்தும் அதிமுகவினர், தைரியமிருந்தால் என் வீட்டில் ரெய்டு விட்டுப் பார்க்கட்டும், எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று மேடையிலேயே ஆவேசமாக சவால் விடுத்துள்ளார்.
இந்த விழாவில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்த நிலையில், அதிமுகவின் உள்விவகாரங்கள் குறித்தும் மரகதம் குமரவேல் பல அதிரடி உண்மைகளை உடைத்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்களும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களுமாக அதிமுக இரண்டாகப் பிரிந்ததாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலனுக்காகவே தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததாக விளக்கமளித்தார். ஆனால், இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத அதிமுகவின் சில “கருப்பு ஆடுகள்”, தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் சமூக ஊடகங்களில் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதியில் தான் தோற்க வேண்டும் என்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் சதி செய்ததாகக் குற்றம்சாட்டினார். தேர்தல் சீட் கிடைக்காத விரக்தியில், அவர்கள் திமுக வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேலை செய்ததற்கான ஆடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிடப் போவதாகவும் எச்சரித்தார். “அதிமுகவிலேயே இருந்து கொண்டு திமுகவுக்கு உடந்தையாக இருந்த துரோகிகள் தான் இன்று என் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று அவர் சாடினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்று வாழ்ந்தாரோ, அதேபோல் தவெக தலைவர் விஜய் இன்று அன்பு என்ற ஒற்றை வார்த்தைக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று மரகதம் குமரவேல் புகழாரம் சூட்டினார். தளபதி தமிழ்நாட்டின் முதல்வராக அமர்வதைத் தடுப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி வைக்கக் குதிரை பேரம் நடத்தினார் என்றும், ஆனால் அந்தச் சதி வேலைகள் அனைத்தும் தற்போது உடைந்துவிட்டதாகவும் கூறினார். இறுதியாக, “கடவுளும் தமிழ்நாட்டு மக்களும் நம்மோடு இருக்கிறார்கள்; தளபதி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர், அவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 20 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆளப்போவது உறுதி” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…