விருச்சிக ராசிக்குள் நுழையும் புதன்… மொத்த அதிர்ஷ்டமும் இந்த ராசிக்காரர்களுக்கு தான்… இதுல உங்க ராசி இருக்கா…?

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இருந்து வருகின்றார். இதனிடையே வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசிக்குள் நுழைய உள்ளார். செவ்வாயின் விருச்சிக ராசிக்குள் புதன் செல்ல இருப்பதால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.

விருச்சிகம்:

   

இந்த ராசிக்காரர்களுக்கு செயல்பாட்டு திறன் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் இடையேயான உறவு இனிமையாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

   

கும்பம்:

 

இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நன்றாக இருப்பார்கள். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்த காலத்தில் புதிய தொழிலை தொடங்குவது நல்லது. தந்தையுடன் ஆனால் உறவு மேம்படும்.

சிம்மம்:

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் ஆசைகள் இந்த நேரத்தில் நிறைவேறும். வாழ்க்கை செழிப்பாக மாறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.