Categories: சினிமா

சினிமாவில் பலருக்கு ரஜினி, விஜய் இடத்தை பிடிக்க ஆசை… ஒரே போடாய் போட்ட ப்ளூ சட்டை மாறன்…

Spread the love

ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படும் இளமாறன் தமிழ் சினிமா துறையில் சிறந்த திரைப்பட விமர்சனகளில் ஒருவர். பொதுவாக ஒருவர் ஒரு படத்தை பார்த்து விட்டால் பிடித்தது எது பிடிக்காதது எது என்பதை மட்டும் கூறுவார்கள். இவர் ஒரு படி மேலே போய் படத்தின் உண்மைகளையும் சில நேரம் அவமதிக்கும் விதமாகவே சர்ச்சைக்கு உள்ளாகும் விமர்சனங்களை போட்டு உடைப்பவர். அதன்படி தற்போதும் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் போட்ட பதிவில் சிவகார்த்திகேயனை பற்றி சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பது என்னவென்றால் கோட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் தோன்றுவார். அப்போது உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் நான் இங்க பார்த்துக்கிறேன் அப்படின்னு டயலாக் பேசுவார். இதை வைத்தே ஆரம்பித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

நான் பார்த்துக்கிறேன் அப்படின்னா என்ன சொல்ல வருகிறார் சிவகார்த்திகேயன். விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்று சொல்கிறாரா. இன்றைய சினிமாவில் இருக்கும் பலருக்கும் ரஜினி மற்றும் விஜயின் இடத்தை பிடிப்பதற்கு மிகவும் ஆசை உள்ளது. ஆனால் ரஜினி அவரிடத்திற்கு வருவதற்கு 50 வருடங்கள் ஆகியிருக்கிறது விஜய்க்கு 30 வருடங்கள் ஆகி இருக்கிறது.

காதல் குடும்பம் ஆக்சன் நகைச்சுவை என பல ஜானர்களில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய். அதனால தான் அவருக்கு இத்தனை கோடி ரசிகர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் முதலில் ரஜினியாக விரும்பி இருக்கிறீர்கள். அதனால் தான் ரஜினி முருகன், வேலைக்காரன், மாவீரன், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று உங்கள் படங்களுக்கு டைட்டில் வைத்தீர்கள்.

ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் போராடினீர்களாம். உங்கள் நெருங்கிய நண்பர் நெல்சன் பரிந்துரைத்தும் தலைவர் ரஜினிகாந்த் நோ சொல்லிவிட்டாராம் என்று ஒரு சில தகவல் வெளிவந்தது. இதற்கு காரணம் நீங்கள் ஒரு வேலை நடித்து படம் ஹிட்டாகி இருந்தால் என்னால்தான் படம் ஹிட்டானது என்று சொல்லிவிடுவீர்களோ என்று ரஜினிகாந்த் அலர்ட் ஆகிவிட்டார். இன்றைய ரசிகர்களுக்கு தலைவரை பின்பற்றினால் வேலைக்காகாது என்று தற்போது விஜய் பக்கம் தாவி இருக்கிறீர்கள்.

நீங்கள் இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே காமெடி படங்கள் தான். நீங்கள் சீரியஸாக நடிக்க முயன்ற வேலைக்காரன் மாவீரன் போன்ற படங்கள் எதுவுமே ஓடவில்லை. எம்ஜிஆர்- சிவாஜி ரஜினி-கமல், விஜய்- அஜித் ஆகியோர் இடங்களை யாராலும் பிடிக்க முடியாது. விஜய் அரசியலுக்கு சென்றாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது.

நான்தான் குட்டி தல சின்ன தளபதி என்ற பெயருடன் கனவை கண்டு கொண்டு இருக்காமல் இருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு எப்படி முன்னேறலாம் என்பதை நினைத்து நடப்பதே சாமர்த்தியம் என்று போட்டு உடைத்து பேசியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

2 மணத்தியாலங்கள் ago