Categories: சினிமா

நடிகர் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய கார்த்தி.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் சங்க நிர்வாகிகள் கூடி ஆய்வு நடத்தி சில தீர்மானங்களை நிறைவேற்றினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர் உள்ளார். துணைத் தலைவராக பூச்சி எஸ்.முருகன் உள்ளார். நடிகர் கார்த்தி பொருளாளராக பதவி வகிக்கிறார். இந்த நிலையில் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா, சமூக செயற்பாட்டாளர் ராஜு கோபி ஆகியோர் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து அந்த குற்றம் உறுதி செய்யப்பட்டால் நடிப்பதற்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் நடிகைகள் நிம்மதி அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பது தொடங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் நடிகர் சங்கத்தினர் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக தனி தொலைபேசி எண் ஈமெயில் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் முடிவுக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதன் பிறகு நடிகர் கார்த்தி நடிகர் சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago