ஜூஸில் அத கலந்து கொடுத்தாங்க… தாங்கமுடியாத நெஞ்சு வலி… தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பகீர் கிளப்பிய மன்சூர் அலிகான்..!!

By Mahalakshmi on சித்திரை 18, 2024

Spread the love

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு சேகரிப்பு நேற்று வரை பரபரப்பாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் பல கட்சிகள் போட்டியிடும் நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக சுயேசயாக நின்றிருந்தார். தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் குடியாத்தம் பகுதியில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

   

திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து குடியாதத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததை தொடர்ந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட மன்சூர் அலிகான் கே கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

   

 

இந்நிலையில் மன்சூர் அலிகான் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் குடியாத்தம் சந்தையிலிருந்து பிரச்சார பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது எனக்கு பழச்சாறு மற்றும் மோர் வழங்கப்பட்டது. இதனை குடித்த சில நிமிடங்களிலேயே எனக்கு வாந்தி, மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

எனக்கு கொடுத்த பழச்சாற்றில் விஷம் கலந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். தற்போது தீவிர சிகிச்சை திரையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான் நலமாக இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இவர் வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..