சமூகவலைதளங்களில் சில தினங்களாக பற்றி எரிந்த விவகாரம் மன்சூர் அலிகான், திரிஷா விவகாரம். இப்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள விசித்ரா சொன்ன பாலியல் தொல்லை, மிரட்டலில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஸ்டண்ட் மாஸ்டர் ஏ விஜய் குறித்த குற்றச்சாட்டுகள் அனலாக கொதிக்கின்றன. இந்த இரண்டு பிரச்னைகளுக்கு முன், தமிழ் சினிமாவில் பலரை ஆச்சரியப்படுத்தி, அதிர்ச்சியடைய செய்த விவகாரமாக நடிகர் சிவகார்த்திகேயன், இசைமயமைப்பாளர் டி இமான் விவகாரம் இருந்தது. வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, ஒரு மோசமான நம்பிக்கை துரோகத்தை சிவகார்த்திகேயன் எனக்கு செய்துவிட்டார் என, டி இமான் சொன்னது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் இதுகுறித்து பலவிதமான கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுபற்றி எந்த ஒரு பதிலோ, விளக்கமோ கருத்தோ சொல்லாமல் சிவகார்த்தியேன் மவுனமாக இருந்து வருகிறார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் சுபேர் கூறியதாவது, இந்த விவகாரமான பிரச்னையை, ஒரு விதமாக அதே நேரத்தில் லாவகமாக கையாண்டார் சிவகார்த்திகேயன் என்பதுதான் உண்மை. இல்லையென்றால், இது இன்னும் வேறுவிதமான பல சிக்கல்களை சிவகார்த்திகேயனுக்கு ஏற்படுத்தி இருக்கும். மன்சூர் அலிகானை போல, திரும்ப திரும்ப பேசி, திரிஷா விஷயத்தை அவரே பெரிது பண்ணி விட்டார். ஆனால் சிவகார்த்திகேயன் வாயே திறக்காமல் இருந்து சூப்பராக ஹேண்டில் செய்துவிட்டார்.

இந்த விவகாரத்தை ஆறப்போட்டால், காலப்போக்கில் அது தானாகவே மாறிவிடும் என்பதுதான் சிவகார்த்திகேயனின் எண்ணம். இதை மன்சூர் அலிகான், திரிஷா அளவுக்கு சோசியல் மீடியா, டிவி செய்தி சேனல்கள் பெரிது பண்ணாமல் விட்டதற்கு முக்கிய காரணம், இதில் சிவகார்த்திகேயன், இமான் என இருவரது குடும்பங்களும் சம்பந்தப்பட்டுள்ளது. அதனால்தான், அந்தளவுக்கு இறங்கி இந்த பிரச்னையை எடுத்துச் செல்லவில்லை. மன்சூர் அலிகான் போல் சொதப்பாமல், தனது விஷயத்தை லாவகமாக ஹேண்டில் செய்ததால்தான் சிவகார்த்திகேயன் பல பிரச்னைகளில் சிக்கவில்லை. பதிலுக்கு சிவகார்த்திகேயன் பேசி, அவருக்கு பதில் தர இமானும் பேசி, இப்படி மாறி மாறி பேசி இருந்தால், இது இன்னும் மிக மோசமாக போயிருக்கும் என்று கூறியிருக்கிறார் சினிமா விமர்சகர் சுபேர்.
