தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் எப்போதும் யாரைப் பற்றியும் பயப்படாதவர். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். இதற்காக பலமுறை சிக்கலிலும் மாட்டி இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், இருதயராஜ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூர் அலி கான் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் லியோ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை த்ரிஷாவை ஆபாசமாக பேசியது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக, பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இணையம் முழுவதும் இந்த வீடியோ குறித்த கண்டனங்கள் அதிகம் எழுந்து ஹாட் டாபிக்காக சென்று கொண்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலி கான் அந்த வீடியோவில் ‘த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா? ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை’ என ஆபாசமாக பேசியிருந்தார்.
This is the video Loki talking about pic.twitter.com/k5yi92ig0M
— Vakugu (@vakugu) November 18, 2023
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை திரிஷா தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘ சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ பதிவு ஒன்று என் கவனத்திற்கு வந்தது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவமரியாதையான பெண் வெறுப்புமிக்க பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையை பகிர்ந்துகொள்ளாததற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி என் திரை வாழ்க்கையில், இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். இவரைப்போன்ற நபர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்’ என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதோ அவரின் பதிவு…
A recent video has come to my notice where Mr.Mansoor Ali Khan has spoken about me in a vile and disgusting manner.I strongly condemn this and find it sexist,disrespectful,misogynistic,repulsive and in bad taste.He can keep wishing but I am grateful never to have shared screen…
— Trish (@trishtrashers) November 18, 2023
