‘எவனோ கொம்பு சீவி விட்ருக்கான்.. பல பிரச்சனை இருக்கு.. விட்டுட்டு பொழப்ப பாருங்கடா.. சர்ச்சை பேச்சு குறித்து மன்சூர் அலி கான் அதிரடி…

By Begam on கார்த்திகை 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மன்சூர் அலி கான். இவர் லியோ திரைப்படத்தில் இருதய ராஜ் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்த நடிகை திரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. தற்பொழுது இந்த செய்தி தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

 

   

தற்பொழுது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,  ‘அய்யா பெரியோர்களே, திடீர்னு நான் த்ரிஷாவை தப்பா பேசிவிட்டேன் என்று, என் பொண்ணு, பசங்க வந்த செய்தியை அனுப்பிசாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகும் நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல பிரபல கட்சியில் போட்டியிடுறேனு சொன்ன வேளையில் வேண்டுமனே எவனோ கொம்பு சீவிவிட்டு இருக்கானுங்க. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்.

   

 

உண்மையில் அந்த பெண்ணை உயர்வாத்தான் சொல்லி இருப்பேன். அனுமார் சஞ்சீவி மலையை கையில் தாங்கிக் கொண்டு போன மாதிரி, வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. அந்த ஆதங்கத்த காமெடியா சொல்லி இருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா, நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா.

நான் இதுவரை 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். நான் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுக்கிறவன் என்பது அனைவருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. வீடியோவை தப்பா கட் பண்ணி காமிச்சு அவங்களை கோவப்பட வெச்சிட்டாங்கன்னு தெரியுது. உலகத்துல எத்தனையோ பிரச்சனை இருக்கு. பொழப்ப பாருங்கப்பா’ என மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதோ அவரின் பதிவு…