திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்து, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான், தற்போது எதிர்பாராத விதமாகத் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் களத்தில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வந்த அவர், திடீரென நிலவிய கடும் நிதி நெருக்கடி மற்றும் இதர இக்கட்டான சூழல்கள் காரணமாக இந்தப் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது விலகலைத் தொடர்ந்து திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மன்சூர் அலிகான் மட்டுமின்றி, அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற மூன்று வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
