தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு யார் வெற்றிவாகை சூடப் போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது. விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பலரும் அவரை விமர்சனம் செய்து வரும் நிலையில் எதற்கும் செவி சாய்க்காமல் தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்திக்கும் போது விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், பாஜகவை ஆதரிக்கும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பாசிச கட்சிகள். அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லை.
2026 ஆம் ஆண்டு திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். நானே அந்த கட்சிக்காக வேலை செய்தாலும் செய்வேன். வேறு வழி இல்லை. என்னுடைய போராட்டமும் பிரச்சாரமும் தரையில் கால் பதியும். விஜய் போல வானத்தில் சுற்றிக்கொண்டு இருக்க மாட்டேன். தனது காலை தூக்கி காட்டி இந்த கால் தரையில் பட வேண்டும், அடிமட்ட மக்களை சென்று சந்திக்க வேண்டும், மார்க்கெட்டுகள், வயல்வெளிகள் மற்றும் சாலைகளில் இந்த கால் பட வேண்டும் என மன்சூர் அலிகான் சவால் விட்டார். வானத்தில் உலாத்திக் கொண்டு வான தூதுவர்களாக இருக்கக்கூடாது. விமானத்தில் சென்று விட்டு விமானத்தில் வந்தால் பணக்காரனுக்கு தான் சொம்பு அடிப்பார்கள். பணக்காரனுக்கு தான் பல்லாக்கு தூக்குவார்கள்.
பேரறிஞர் அண்ணா எப்படி இருந்தார். ஆனால் இன்றைக்கு தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருபவர் எல்லாம் அப்படியா இருக்காங்க? ஆனால் விஜய் இப்படி இருந்தால் ஒன்றுமே பண்ண முடியாது, ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அரசியல் களத்தில் விஜய் எனக்கு இணையானவர் கிடையாது. அவரைப் பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளார், செய்யட்டும், அவரிடம் நிறைய பணம் உள்ளது, நிறைய செலவு செய்யட்டும் என்று மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…