இதனால் தான் “தக் லைப்” படம் ஓடல… அதுமட்டும் இருந்திருந்தா வேற மாறி இருந்திருக்கும்… ஒரே போடாய் போட்ட மன்சூர் அலிகான்..!!

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

நடிகர் கமலஹாசன் – மணிரத்தினம் கூட்டணியில் உருவான படம் தான் தக் லைப். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார், இந்த படம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மணிரத்தினத்தின் மெட்ராஸ்  டாக்கீஸ் நிறுவனமும், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படம் படுதோல்வியை சந்தித்தது.

   

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் தக் லைப்  படம் ஓடாததற்கு இதுதான் காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, “காலை கனவினில் காதல் கொண்டேன் ” என்ற முத்தமழை பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அது இடம்பெற்றிருந்தால் படம் ஓடி இருக்கும்.  அந்த பாடல் இல்லாததுதான் படம் வரவேற்பு பெறாததற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.