“திரிஷாவும் நானும் பக்கத்துல பக்கத்துல.. பாக்க நல்லா இருந்துச்சி”.. பிரஸ் மீட்டில் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மன்சூர்..

By Begam on நவம்பர் 21, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல வில்லனாக வளம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களை இவரே தயாரித்து இயக்கியும் இருக்கிறார். தற்போது சரக்கு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சென்சாரில் சிக்கி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

   

மன்சூர் அலிகான் எப்போதும் யாரைப் பற்றியும் பயப்படாதவர். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். இதற்காக பலமுறை சிக்கலிலும் மாட்டி இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், இருதயராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகானுக்கு எதிர்பார்த்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுவில்லை என்றாலும், ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இந்த கேரக்டர் பார்க்கப்பட்டது.

   

 

தற்பொழுது இவர் லியோ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை த்ரிஷாவை ஆபாசமாக பேசியது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக, பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் ‘த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா? ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை’ என ஆபாசமாக பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த  த்ரிஷாவும் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபலங்கள் பலரும்  தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இதுதொடர்பாக விசாரிக்க டிஜிபி -க்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியிருந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதில் அவர் பல விஷயங்களை கூறி இருக்கிறார். இதோ அந்த அந்த வீடியோ…