தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா, பிரியா மணி, வடிவுக்கரசி உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
ஆனால் அப்பாவைப் போலவே இயக்குனர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த மகன் மனோஜைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரை பிரம்மாண்டமாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த படம் ப்ளாப் ஆனது. மனோஜால் நடிகராக பெரியளவில் சாதிக்க முடியாமலேயே போனது. நேற்று அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் வாழ்க்கையில் கொண்டு வந்த அதிர்ஷ்டம் பற்றி பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “எங்க அண்ணன் பாரதிராஜாவுக்கு மனோஜ் பிறந்த அடுத்த நாளில்தான் ‘பதினாறு வயதினிலே’ படத்தின் வாய்ப்புக் கிடைத்தது. மகனைப் பார்த்துவிட்டு வந்து பட வேலைகளைத் தொடங்கலாம் என ஊரில் இருந்த மனைவி மற்றும் மகனைப் பார்க்க எங்க அண்ணன் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்து சென்று வந்தார்.” எனக் கூறியுள்ளார்.
இப்படி பாரதிராஜாவின் வாழ்வில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்த செல்லக் குழந்தையாக இருந்துள்ளார் மனோஜ்.அதனால்தான் பாரதிராஜா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ என்று பெயர் வைத்தார் போல.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…