Categories: சினிமா

“என் மனைவி மட்டும் இல்லான என்னைக்கோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்.. மனைவி குறித்து மறைந்த நடிகர் மனோஜ் எமோஷனலாக அளித்த பழைய பேட்டி..!

Spread the love

தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும் அழகிகளையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலையும் அவர்களுடைய மொழியை தமது செல்லுலாய் கண்களால் காட்சிப்படுத்தியவர் தான் இயக்குனர் சிகரம் பாரதிராஜா. சினிமா செட்டுக்குள் பார்த்துப் பார்த்து வறண்டு போன கண்களுக்கு கிராமத்து வீடுகளுக்குள் புகுந்து இயற்கை அழகை கேமராவில் புகுத்தி என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா என்ற அந்த கம்பீரமான குரல் தமிழர்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை நினைவூட்டும். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா தன்னுடைய இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலமாக தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை அறிமுகப்படுத்தினார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மனோஜ் பாரதிராஜா வருஷம் எல்லாம் வசந்தம், சமுத்திரம் மற்றும் ஈர நில உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படமும் அவருக்கு பெயரை பெற்று தரவில்லை. இதனால் சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த மனோஜ் பாரதிராஜா சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை என்பதால் சோர்வு அடையாமல் வெளிநாட்டுக்குச் சென்று இயக்குனருக்கான பிரத்தியேகமான பயிற்சியை பயின்று இயக்குனராக அவதாரம் எடுத்த மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

கிராமத்து காதலை ரசித்து சித்தரித்த அளவில்லா காதல் திரைப்படங்களை கொடுத்த ஜாம்பவான் பாரதிராஜாவின் மகன் என்பதை தன்னுடைய முதல் படத்திலேயே கையாண்டு ஒரு அழகான அழுத்தமான காதல் கதையை கொடுத்தார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் நடித்திருந்தார். இதனிடையே மனோஜ் பாரதிராஜா நடிகை நந்தனாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மனோஜ் பாரதிராஜா திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் வாழ்த்திய நிலையில் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா தனது மனைவி பற்றி பழைய பேட்டியில் கூறிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், நான் ரொம்ப கஷ்டப்பட்ட காலங்களில் என்னுடைய அனைத்து துன்பங்களையும் என் மனைவி தான் அவர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டார். என்னுடைய குழந்தைகளும் அப்படித்தான். நான் ஏதாவது விஷயத்தை மறைக்க வேண்டும் என்று அமைதியாக இருக்கிறேன் என்றால் அதை என் மனைவி அப்படியே கண்டுபிடித்து விடுவார். என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் என்ன அர்த்தம் என்பது என் மனைவிக்கு நன்றாகவே தெரியும்.

எனக்காக அவ ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா. அவ நெனச்சிருந்தா பெரிய நடிகையா போய் இருக்கலாம். என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு எனக்காக அவள் வாழ்க்கையை தியாகம் பண்ணி இருக்கா. அத நெனச்சாலே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என் மனைவி மற்றும் இல்லை என்றால் நான் என்றோ பைத்தியம் ஆகி இருப்பேன். என்னை நம்பி வந்த ஜீவன் எனது கஷ்டங்களிலும் துக்கங்களிலும் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் நான் சரிவில் மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் என்னை மொத்தமாக மீட்டுக் கொண்டு வந்தவர் என்னுடைய மனைவி மட்டும்தான் என்று மனோஜ் அந்த பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago