‘மன்மதன்’ படத்தில் நடித்த இந்த நடிகர் இப்ப எப்படி இருக்காரு தெரியுமா..? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே…

By Begam on சித்திரை 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.  கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்பொழுது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த  மாநாடு,  வெந்து தணிந்தது காடு, பத்து தல  போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

   

இவர் தற்பொழுது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 48 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதுமட்டுமின்றி உலகநாயகன் கமலஹாசனின் Thug life படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  சிம்பு நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான ‘மன்மதன்’ திரைப்படம், சூப்பர் ஹிட் அடித்தது.

   

 

சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்தின் கதை, திரைக்கதையை சிம்பு எழுதியிருந்தார். சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, முருகன் இயக்கியிருந்தார், யுவன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த படத்தில் சிந்து துலானியுடன் நெருக்கமான காட்சியில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலகிருஷ்ணா. இதனை சிம்பு பார்ப்பதும் போன்ற காட்சி படத்தின் முக்கியமான இடத்தில் வரும். தற்பொழுது நடிகர் பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘ அவரா இது..?’ என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.