‘இனிமேல் அப்பா-ன்னு தான் கூப்புடுவேன்’… ‘அன்பே வா’ சீரியல் நடிகர் திருமணம் செய்த பெண்ணுக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா..?

By Begam on சித்திரை 20, 2024

Spread the love

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் தொடர் ‘அன்பே வா’ .   வருண் என்ற கேரக்டரில் பூமிகாவுடன் நடித்து வந்தவர் நடிகர் விராட். இவர்களது ரொமன்ஸ் சீன்களை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளமே  உள்ளது. சமூக வலைதளங்களில் இவர்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் உள்ளனர்.

   

சமீபத்தில் நடிகர் விராட்  தனது நீண்ட நாள் காதலியான நவீனா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

   

இவரை விராட் – நவீனா ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ரசிகர்களும், பிரபலங்களும் இத்திருமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். விராட்டின் மனைவி நவீனா ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகளும் உள்ளார். மேலும் நடிகர் விராட்டை விட நவீனாவின் வயதும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

 

#image_title

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு நவீனா, தனது கணவர் விராட் மற்றும் மகளுடன் அளித்த பேட்டியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நவீனாவின் மகள் கூறியதாவது, இப்ப அவரை dad னு கூப்புடுறேன்.  நான் இன்னும் அவர் கிட்ட ரொம்ப கம்பர்ட்டபிளா ஃபீல் பண்ணும்போது அப்பா-னு கூப்பிடுவேன்’ என்று கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அன்பே வா’ சீரியல் நடிகர் திருமணம் செய்த பெண்ணுக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா..?’  என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)