Actor Ajith Kumar

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்த மங்காத்தா – 9 நாட்களில் இதுவரை வசூல் இத்தனை கோடிகளா? – ஷாக் ஆன தளபதி ரசிகர்கள்!

By Elango on மாசி 1, 2026

Spread the love

கடந்த 23ம் தேதி இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்சனில் நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படம் ரி ரிலீஸ் ஆனது. இது அஜீத்குமாரின் 50வது படம். அவர் நடித்த படங்களில் மங்காத்தா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள மங்காத்தா படத்தை ஏகே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மங்காத்தா படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2011ம் ஆண்டில் வெளியான மங்காத்தா படம் இப்போது மீண்டும் தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் பெரிய ஆதரவுடன் மங்காத்தா ஓடி வருகிறது. கடந்த 9 நாட்களில் மங்காத்தா படம் மொத்தம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதுவரை ரி ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் ஆபிஸில் மங்காத்தா படம் வசூலில் முன்னிலையில் பட்டையை கிளப்பி வருகிறது. இது தளபதி ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.