#image_title
மலையாளத்தில் ரிலீசான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மலையாளம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் பேசப்பட்டது. சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி 240 கோடிக்கு மேல் வசூல் செய்து மஞ்சுமெல் பாய்ஸ் படம் சாதனை படைத்தது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு ரிலீசான குணா திரைப்படத்தில் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இடம் பெற்றது. அந்த பாடலை தான் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். சொல்லப்போனால் படம் வெற்றி பெற்றதற்கு அந்த பாடலும் முக்கிய காரணமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். அன்று இளையராஜா எழுதிய பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் கண்மணி பாடலை தனது அனுமதி பெறாமல் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் பயன்படுத்தியதாக கூறி தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். உடனே மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இளையராஜாவை சந்தித்து பேசினார். அப்போது இழப்பீடாக இளையராஜா 2 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளார். அப்படி இல்லை என்றால் பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடுள்ளார்.
இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியதாக பட குழுவினர் மீதும் கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் இளையராஜாவுடன் மஜ்மல் பாய்ஸ் படம் குழுவின் தயாரிப்பாளர்கள் அமர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இறுதியில் இளையராஜாவுக்கு 60 லட்ச ரூபாய் பணம் கொடுத்து பிரச்சினையை பேசி முடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ilaiyaraja
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…
மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை,…
ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சியமைக்க அழைக்காமல், வெறும்…
தமிழக அரசியலில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ்…