#image_title
கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த படம் என்று நாயகன் திரைப்படத்தைச் சொல்லலாம். அந்த படம் அவருக்கு இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த படம்தான் மணிரத்னம் சகாப்தத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியது என சொல்லலாம்.
அப்படி மணிரத்னம்- இளையராஜா- கமல்ஹாசன் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு மைல்கல் திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறைக்கு பிறகு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்த படத்தின் உருவாக்கத்தின் போது பல பிரச்சனைகளை படக்குழுவினர் சந்தித்துள்ளனர். படத்தின் கதை மும்பையைச் சேர்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் பரவ, அவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, அவரை தேடி சென்றுள்ளனர். ஒருவழியாக அந்த பிரச்சனையை முடித்தால் படம் சென்சாரில் குற்றச் செயல்களை ஆதரிப்பதாக பிரச்சனை கிளம்பியுள்ளது.
ஆனால் இந்த படம் உண்மையில் 1972 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான தி காட்பாதர் என்ற படத்தின் திரைக்கதையைக் காப்பியடித்து உருவாகப்பட்ட படம்தான். படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு அப்படியே மார்லன் பிராண்டோவை பிரதியெடுத்தது போல இருக்கும்.
ஆனால் நாயகன் படத்தில் சில அடிப்படையான விஷயங்களை மணிரத்னம் மாற்றியிருந்தார். அதனால் அந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி சிறந்த வெளிநாட்டு படத்துக்கான இந்தியாவின் தேர்வாக ஆஸ்கர் விருதுக்கு இந்தபடத்தை அனுப்பியதுதான் சிரிப்பை வரவழைக்கக் கூடியது. ஏனென்றால் நாயகன் எந்த படத்தைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டதோ அந்த காட்பாதர் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்ற படம் என்பதுதான் நகைமுரண்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…
நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…
இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…
டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும்…