சினிமாவை பொறுத்தவரையில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். பல கோடி பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் தோல்வியை தழுவுவதும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதும் சினிமாவில் சகஜமான ஒன்று. ஆனால் ஒரு சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஓவர் பில்டப் கொடுத்து கடைசியில் அது தோல்வியை தழுவி விடுகிறது. இந்த 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல ஆச்சரியமும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருந்துள்ளது. இந்த வருடம் ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் படு தோல்வியை சந்தித்துள்ளன. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு டாப் 10 மொக்கை படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடைசி உலகப் போர்:
இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ள திரைப்படம் தான் கடைசி உலகப் போர். ஹிப் ஹாப் ஆதி எழுதி நடித்த திரைப்படம் தான் இது. 2028 ஆம் ஆண்டு பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் சுமார் 4 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியை தழுவியது.
பிளடி பெக்கர்:
நெல்சன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் திரைப்படம் மோசமான கதை களத்துடன் படுதோல்வியை தழுவியது. தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் ஓரளவுக்கு கூட வசூல் செய்யாமல் மண்ணை கவ்வியது.
பிரதர்:
தீபாவளிக்கு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிரதர். எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்துக்கு பெரிய ஹைப் இருந்தும் படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை.
ரத்னம்:
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் தான் ரத்னம். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் மோசமான கதை காலத்துடன் தோல்வியை தழுவி குறைந்த அளவு மட்டுமே வசூல் செய்தது.
சைரன்:
ஒரே வருடத்தில் ஜெயம் ரவியின் அடுத்த அடுத்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்த நிலையில் இந்த படம் வெளிவந்தது கூட பலருக்கும் தெரியாமல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
லால் சலாம்:
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்த திரைப்படம் தான் லால் சலாம். இந்தப் படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனது. 21 நாள் ஷூட் பண்ணின காட்சிகள் இடம்பெறவில்லை என்று சொன்னாங்க. 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 35 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியை தழுவியது.
தங்கலான்:
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இது. சுமார் 130 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி படும் தோல்வியை தழுவியது.
இந்தியன் 2:
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் மற்றும் சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.
வேட்டையன்:
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். சுமார் 310 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படம் படு தோல்வியை தழுவியது.
கங்குவா:
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்திற்கு படக்குழுவினர் மலேசியா வரை ப்ரமோஷன் செய்த நிலையில் படம் படு தோல்வியை சந்தித்தது.
நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…