தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.
அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அவர் தெலுங்கில் கேம்சேஞ்சர் படத்தை இயக்கி, அதை பேன் இந்தியா ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்பார்த்தார். ஆனால் அந்த படமும் பப்படம் ஆனது. இதனால் ஷங்கர் இப்போது தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் என்று கருத்துகள் எழுந்துள்ளன.
அடுத்து ஷங்கர் இயக்கவுள்ள படமான வேள்பாரி வருமா அல்லது குறைந்த பட்ஜெட்டில் ஏதேனும் ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுத்து கம்பேக் கொடுத்து பின்னர் வேள்பாரி படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் ஷங்கருடனான தனது சிறுவயது அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “நான் அப்போது ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தேன், ஷங்கர் சார் அந்நியன் ஷூட்டிங்குக்காக கோபாலபுரம் வந்திருந்தார். அப்போது அவருக்கு நான் கைகாட்டினேன். அவரும் எனக்குக் கைகாட்டினார். நான் அவரிடம் ஆட்டோகிராஃப் வேணும் என்று கேட்டேன். அவரும் என்னை அருகில் அழைத்துப் போட்டுக் கொடுத்தார்.
அப்போது நான் அவரிடம் ‘சார், நான் பாய்ஸ் படம் 5 தடவை பார்த்துட்டேன் என்றார். நான் சிறுவன் என்பதால் எப்படிடா பாய்ஸ் படம்(ஏ சான்றிதழ்) பார்த்த என்று கேட்டார். நான் சிடியில் என்று சொன்னேன். அதைக் கேட்டு கோபமாகி ஓடுடா என்று ஜாலியாக சொன்னார். அப்படி நான் பார்த்த இயக்குனர் இப்போது நான் இயக்க விரும்பும் இளம் ஹீரோக்களில் மணிகண்டனும் ஒருவர் என சொல்லி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…
கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…
தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…
தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…