ஆர். சுந்தர்ராஜன், டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் 80 களில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். இயக்குனர் பாக்யராஜும் இவரும் கல்லூரி தோழர்கள். பயணங்கள் முடிவதில்லை என்ற சில்வர் ஜூப்ளி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன்.
இவர் இயக்குனர் பாக்யராஜின் பள்ளித் தோழன். இவரும் பாக்யராஜும் சேர்ந்து மேடை நாடகங்கள் போட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து இயக்குனர் ஆகி முன்னணி நடிகராகவும் ஆகிவிட்டார். அவரைப் போல தானும் இயக்குனர் ஆகவேண்டுமென்ற ஆசையோடு சுந்தர்ராஜன் சென்னைக்கு வந்து பாக்யராஜைப் பார்த்துள்ளார். அவரின் மூலமாக சில தொடர்புகளைப் பிடித்து பயணங்கள் முடிவதில்லை படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கி தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சுந்தர்ராஜன் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பதை நடிகர் மணிகண்டன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “சுந்தர் ராஜன் சார் ‘நான் பாடும் பாடல்’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் தன் மகள் காதலித்த நபர் இறந்துவிட அவருக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்கும் தந்தையைப் பற்றிய கதை. படத்தை எல்லோருக்கும் போட்டுக் காட்டியுள்ளார்.

அப்போது படம் பார்த்தவர்கள் தந்தை மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறார் என்பதை விட, அந்த இறந்து போன காதலனின் தந்தை அந்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் என்றிருந்தால் இன்னும் உணர்வுப் பூர்வமாக இருக்கும் என சொல்லியுள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்ட சுந்தர்ராஜன் சார் அப்பா என்பதை டப்பிங்கில் மாமா என மாற்றிவிட்டார். அப்பா, மாமா ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உச்சரிப்புதான் வரும்” எனக் கூறியுள்ளார்.
