கோவையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். செளரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில், மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களை அவர் முன்வைத்தார். வடமாநிலங்களில் திட்டமிட்டு நீட் வினாத்தாள்கள் கசிவதாகவும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டுமே இத்தகைய முறைகேடுகள் அரங்கேறி வருவதாகவும் சாடிய அவர், பா.ஜ.க தலைவர்களின் குழந்தைகளுக்கு இதன் மூலமாகவே மருத்துவ இடங்கள் எளிதாகக் கிடைக்கின்றன என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வின் பாதிப்பால் இந்த ஆண்டு தமிழகத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், கோவையில் உயிரிழந்த மாணவி கீர்த்தனாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தெரிவித்தார். முந்தைய காலங்களில் அனிதா உயிரிழந்தபோது ஏற்பட்ட மக்கள் எழுச்சி, தற்போது கோவையில் கீர்த்தனா இறந்தபோது சாதாரணமாகக் கடந்து செல்லப்படுவதாகக் கூறி அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். மேலும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகள் எப்போதுமே தமிழகத்திற்கு எதிரானது என்றும், தேர்தல் களத்தில் அவர்கள் தொடர்ந்து தமிழக மக்களால் தோற்கடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் களத்தில் பா.ஜ.க-வை எதிர்க்க மற்ற கட்சிகள் பயப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாகத் தாக்கினார். “கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து வேறு அமைப்பின் பெயரில் ஒருவர் வரப் போகிறார்” என்று கிண்டலடித்தார். அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் சோதனைக்கு அஞ்சி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அமைதி காப்பதாகவும், மடியில் கனம் இல்லாததால் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் மட்டுமே மோடி மற்றும் அமித்ஷாவைத் துணிச்சலாக எதிர்த்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைக் குறிப்பிட்ட அவர், பணம் கொடுத்தால் வாக்கு என்ற நிலை தற்போது மாறி வருவதாகவும், ஐந்து தொகுதிகளில் வென்றாலும் தமிழக ஆட்சியைத் தீர்மானிக்கும் பூட்டின் சாவியாக காங்கிரஸே இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, கட்சி நிர்வாகிகளிடையே ஒழுக்கத்தை வலியுறுத்திய மாணிக்கம் தாகூர், லஞ்சமற்ற மற்றும் நேர்மையான அரசியலை காங்கிரஸ் தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் தள்ளுமுள்ளு போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் தாம் மேடையை விட்டு உடனடியாகக் கிளம்பிவிடுவேன் என்றும் எச்சரித்தார். இதற்கிடையே, கூட்டம் நடைபெற்ற மண்டபத்தின் வாயிலில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், தங்கள் மாவட்ட நிர்வாகி நாகராஜ் என்பவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் தற்காலிகமாகச் சலசலப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…