காங்கிரஸை அடித்தால்… திருப்பி அடிப்போம்…திமுகவிற்கு எச்சரிக்கை கொடுத்த… மாணிக்கம் தாகூர்…!!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே திமுகவுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளார். திமுகவினருக்கும் தனக்கும் இடையே எந்தவொரு தனிப்பட்ட வாய்க்கால் வரப்பு சண்டையும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், திமுகவினர் அமைதியாக இருந்தால் தாங்கள் தங்களது கட்சி வேலைகளைப் பார்ப்போம் என்றும், மாறாக தங்களை நக்கல் செய்தாலோ அல்லது துரோகி என்று கூறினாலோ அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். “காங்கிரஸை அடித்தால் திருப்பி அடிப்போம்” என்று அவர் மிகத் துணிச்சலாகப் பேசியுள்ளதார்.