ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள சங்க்ரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சிங். இவர் கடந்த செப்டம்பர் 17, 2024 அன்று காலை, சுனெல் பகுதியில் உள்ள தனது வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த விசாரணையின் அடிப்படையில், சிங்கின் மனைவியான கிரண் கன்வார் (32) மற்றும் அவரது காதலரான சுரேந்திர சிங் என்ற சுந்தர் (30) ஆகிய இருவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கிரண் கன்வார் மற்றும் சுரேந்திர சிங் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று உறுதி செய்தது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 103(1) [கொலை], 238(A) மற்றும் 3(5)-ன் கீழ் தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டு, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனையோடு சேர்த்து தலா ரூ. 30,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
