இபிஎஸ்-ஐ முதல்வராக்க துள்ளிக்குதித்த உதயநிதி..? மே 4-ம் தேதி நடந்தது என்ன..?திமுக, அதிமுக ரகசியத் திட்டத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்..!

Spread the love

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன மற்றும் குறைந்தபட்ச நன்றியோ நாகரிகமோ இல்லாத காங்கிரசை இனி எந்தக் காலத்திலும் நம்பப் போவதில்லை என்றும், அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கடுமையாகச் சாடியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், கடந்த மே 4-ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாகக் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அப்போது பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் இரு கட்சிகளுக்கும் இடையே ‘கனெக்டிங் கால்’ மூலம் பேசியதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து துள்ளிக்குதித்ததாகவும், ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்புடன் பாஜகவுக்குச் சாதகமாக இந்த முடிவு எடுக்கப்படவிருந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுகவின் இந்தக் கொள்கையற்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சி உடைத்தெறிந்ததால்தான், அவர்கள் தங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உண்மை தெரிந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் ஆதரவு அளித்ததாகவும், திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் திமுகவும் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது உறுதி என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

அம்மா, அப்பாக்கு அடி குடுங்க மோடி தாத்தா..! பிரதமரிடம் கியூட் கோரிக்கை வைத்த சிறுமி.. மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..!

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…

52 minutes ago

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

1 மணத்தியாலம் ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

1 மணத்தியாலம் ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

2 மணத்தியாலங்கள் ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

2 மணத்தியாலங்கள் ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

2 மணத்தியாலங்கள் ago