செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

   

இதன் மூலம், இதுவரை தலைவராகப் பொறுப்பு வகித்த செல்வப்பெருந்தகையின் பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கணக்குகளிலும், தேசிய அளவிலான அரசியல் நகர்வுகளிலும் முக்கியப் பங்கு வகித்த திறமையான தலைவரான மாணிக்கம் தாகூரின் இந்த புதிய பொறுப்பு, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.