வடிவேலு செஞ்ச வேலையால அவரை அறையப் போயிட்டேன்… கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்!

By vinoth on மார்கழி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மகனே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.

   

அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலு சினிமாவில் எந்தளவுக்கு நகைச்சுவையாகத் தன்னைக் காட்டிக்கொள்வாரோ, அந்தளவுக்கு நிஜ வாழ்க்கையில் அவர் கோபக்காரராக இருந்துள்ளார் .

   

 

அதே போல ஷூட்டிங் ஸ்பாட்டில் பல பிரச்சனைகள் செய்து தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்குவதிலும் வடிவேலு வல்லவராக இருந்துள்ளார். அப்படி அவர் ஹீரோவாக நடித்து எக்கச்சக்கமாக நஷ்டமடைந்த படம்தான் இந்திரலோகத்தில் நா அழகப்பன். இம்சை அரசன் படத்துக்குப் பிறகு ரிலீஸான இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காமெடி சுத்தமாக வொர்க் அவுட் ஆகாததால் படம் எடுபடவில்லை.

இந்த படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் “இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தைப் பார்த்துவிட்டு நான் வடிவேலுவை அறையப் போய்விட்டேன். படத்தில் காமெடியும் இல்லை ஒன்னும் இல்லை. என்னை நல்லா ஏமாத்திட்டேன். ஸ்ரேயாவையும் அந்த படத்தில் ஒழுங்காக பயன்படுத்தாமல் வேஸ் ஆக்கிட்டாங்க. எவ்ளோ சொல்லியும் வடிவேலு கேக்கல. பி வாசு மாதிரி ஒரு இயக்குனர போட்டிருந்தா படம் நல்லா வந்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.