விடாமுயற்சி படத்தின் ரீமேக் உரிமையில் சிக்கல் இருக்கா? இல்லையா?… ஒரு வழியாக வெளியான உண்மை!

By vinoth on மார்கழி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்‌ஷன் மசாலாப் படங்கள்தான்.

   

 

தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் முதலில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் அதை முறையாக அனுமதி வாங்கி படமாக்கப்படவில்லை என்றும் ஒரு தகவல் பரவியது. இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கு சுமார் 120 கோடி ரூபாய் பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அது குறித்து பேசியுள்ள பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் “விடாமுயற்சி படக்குழு ஷூட்டிங் செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ரீமேக் உரிமையை வாங்கிட்டாங்க. அதனால் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது” எனக் கூறியுள்ளார்.