நீ சோறு திங்குறவனா இருந்தா என்கிட்ட வரணும்… கத்துக்கொடுத்த நம்மளையே மிதிக்கிறான்… மகிழ்திருமேனியை தாக்கிய பிரபல தயாரிப்பாளர்..!..!

By Soundarya on கார்த்திகை 27, 2024

Spread the love

மாணிக்க நாராயணம் அளித்த பேட்டியில் முன்தினம் பார்த்தேன் படத்தில் மகிழ்திருமேனி  தான் டைரக்ஷன் செய்தார். இதில் ஏற்கனவே உங்களுக்கு மோசமான அனுபவங்கள் இருந்தது. தற்பொழுது விடா முயற்சியை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது அடுத்து மகிழ்திருமேனி டைரக்ஷன் செய்கிறார். இதில் முதலில் இருந்து ஏராளமான பிரச்சனைகள் இருந்தது. இதில் யார் பக்கம் பிரச்சினை என்பது குறித்து கூறுங்கள் என்று மாணிக்கம் நாராயணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நான் படத்திற்குள் இல்லை. லைக்கா நிறுவனத்தின் பார்ட்னரும் கிடையாது. நான் பேசுவது சரியா என்று தெரியாது.

#image_title

ஆனால் என்னுடைய அனுபவத்தின் படி சொல்கிறேன். மகிழ்த்திருமேனி என்பவன் படத்தை டைரக்ட் செய்யராம்ல, ஒரு படத்தை 120 நாட்கள் எடுப்பார்கள் ஷங்கர் மாதிரி ஆட்கள். சங்கர் மாதிரி ஆட்கள் எடுக்கலாம். ஆனால் ஷார்டை வைத்துக்கொண்டு தான் என்ன செய்கிறேன் என்பது தெரியாமல் இருப்பார்கள். அவர்கள் வந்து அவனால் மற்றவர்கள் முன்னாடி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக் கொள்ளவும் முடியாது . சில நேரத்தில் காணாமல் போய்விடுவான். லைட்ஸ்மேன் கேமரா மேன் எல்லாம் நிப்பான் அவன் காணாம போயிடுவான். இந்த படத்தில் எல்லாருமே பொறுக்கி பயலுக தான். இருக்கிற எல்லாரும் முட்டாப் பயலுக தான். என்னுடைய படத்துல நான் ஒரு கொஞ்சம் முட்டா தனமா யோசிப்பேன்.

   
   

 

என்னுடைய படம் வந்து கிராண்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பது. அது  பைத்தியக்காரத்தனம் என்பது தெரியவில்லை. ஒரு முட்டாள்களை வைத்து படம் எடுக்கிறேன் நீ ஏன் பெனிசுக்கு போனாய் அப்படின்னு நிறைய பேர் என்ன கேப்பாங்க. நான் என்னமோ கிழிச்சிரலாம் என்று நினைத்து போனேன். ஆனால் இவர்கள் சில்லித்தனமான முட்டாள்கள் என்று எனக்கு தெரியாது. அந்த படத்தை ரிலீஸ் பண்ண அதற்கு முதல் நாளை சொல்லிவிட்டேன் படம் ஓட வாய்ப்பு இல்லை என்று. ஆனால் அவனுக்கு ரொம்ப தெரியும் என்று எனக்கு தோணல. ஏதோ அவனுடைய படம் ஒன்னு ரெண்டு ஓடி இருக்கலாம். அவனுக்கு ஒரு பிளாட்பார்மே நமக்கு கொடுத்தோம். அதை வைத்து கத்துகிறான்.

நம்மளை மிதிக்கிறான். இதுதான் மனிதனுடைய இயல்பு. பிளாட்பார்ம்  கொடுத்ததும் நம்மள மிதித்துவிட்டு அவன் மேலே சென்று விடுறேன். அவன் நிறைய புத்தகங்கள் படிப்பான். அதை வச்சு அவன் ஏதோ வாழ்க்கையில முன்னேறுகிறான். அவன் பெரிய ஆளாக வரட்டும் சம்பாதிக்கட்டும் நமக்கென்ன நஷ்டமாக போகிறது. அது நான் கவலைப்பட போகிறது இல்லை. அவனுடைய விருப்பம். அவன் ஒரு முறை என்னுடன் சேலஞ்ச் செய்தான். நான் ஒரு நாள் பெரிய ஆள் ஆகி உங்களுக்கு படம் பண்ணுவேன் என்று சொன்னான். அவன் எனக்கு படம் பண்ண வேண்டாம். வரவும் முடியவில்லை அவன் என்னிடம்.  நீ சோறு திங்கிறவனாக இருந்தால் என்னிடம் வந்திருக்க வேண்டும் அல்லவா? நீ எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறவன். அதனால் என்னிடம் வரவில்லை.

நீ வந்திருந்தாலும் படம் பண்ணி இருக்க மாட்டேன். அது வேறு விஷயம். அதாவது இவனுங்க எல்லாம் என்ன மாதிரி டிராமா பண்றாங்க. எதுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான். 100 படத்துல ஒன்னு ரெண்டு படம் தான் ஓடுது. ஆனா 99 படத்துல பிரமோஷன் பார்த்தீங்கன்னா உலகத்திலேயே இல்லாத எல்லா விஷயங்களும் இருக்கிறது என்பார்கள். படத்தை சரியாக பிரசண்ட் பண்ண தெரியலன்னா படம் எப்படி ஓடும். சினிமா என்பது மாயை அதுக்குள்ள மாட்டேனா வாழ்க்கையே போயிரும் என்று சரமாரியாக பேசியுள்ளார்.