பிக் பாஸ் வீட்டில் மணி – ரவீனா Relationship-ல இருக்காங்களா…? மணியின் முன்னாள் காதலி பெலினா ஓபன் டாக்…

By Begam on கார்த்திகை 15, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் மணி – ரவீனா இருவரும் உள்ளனர். கலந்து கொண்ட நாள் முதலே பிக் பாஸ் வீட்டில் இவர்களது காதல் கிசு கிசு ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் ரவீனா அதனை மறுத்து வந்தார். விசித்ரா, பிரதீப் போன்ற சிலர் நேரடியாகவே இதனை மணி – ரவீனாவிடம் கேட்ட போது கூட, நீங்களே பேசி காதலிக்க வச்சிடுவீங்க போல என நக்கலாக பதிலளித்தார் மணி.

 

   

அதே போல், பிரதீப் கிண்டல் செய்தபோது அதெல்லாம் இல்லை என சாதித்தார் மணி. ஆனால் ஐஷு நீண்ட நாள் தோழி என்பதால், அவரிடம் மட்டும் ரவீனாவுடன் தனக்கு உள்ளது காதல் தான் என்பதை கூறினார். தற்பொழுது இவர்களிருவரும் காதலுக்கு முக்கியத்துவம் தருவதை விட்டுவிட்டு தங்களுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மணியின் முன்னாள் காதலி பெலினா மணி – ரவீனா Relationship பற்றி  முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

   

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான  ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்கள் மணி – பெலினா ஜோடி. ஒவ்வொரு டான்ஸிலும் இவர்களின், கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ரசிக்கப்பட்ட நிலையில், பின்னர் இருவருமே உண்மையாகவே காதலிக்க தொடங்கினர். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் பிரேக் அப்பும் நடந்து விட்டது. தற்பொழுது பெலினா அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ” பிக் பாஸ் போறதுக்கு முன்னாடியே என்கிட்ட நிறைய பேர் கேட்டு இருக்காங்க. என்ன ரவீனா வந்து மணி கூட ரிலேஷன்ஷிப்ல இருக்காங்களா? அப்படின்னு.

வினுஷா கூட ரொம்ப க்ளோசா தான் இருக்கும். அவனுடைய கேரக்டரே அதுதான். யாராவது அழுதா கூட பக்கத்துல உக்காந்து கலாச்சிட்டு உட்கார்ந்திருப்பான். விஷ்ணு கூட கண்டிப்பா அவன் சேர மாட்டான். ஏன்னா அந்த மாதிரி பிஹேவியர் ஆட்டிட்யூட் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப்ல இருக்க கண்டிப்பா சான்சே இல்ல. ஏன்னா ரவீனா மணியை அண்ணன்னு கூப்பிட்டு இருக்கா. எனக்கு தெரியும். அப்படி எல்லாம் இல்லைன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்.” என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

https://www.youtube.com/shorts/379HWnSE71E