400 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை.. 72 வயதில் மருத்துவமனையில் ஆதரவின்றி தவிக்கும் அவலம்..

By admin on கார்த்திகை 15, 2023

Spread the love

சினிமாவில் இமேஜ் இருக்கும் வரை தான் ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ பேரும், புகழும் தேடித் தேடி வருகிறது. ஒரு கட்டத்தில் இமேஜ் இழந்துவிட்டால் அவரை கண்டுகொள்ள ஆள் இருக்க மாட்டார்கள். சினிமா சார்ந்தவர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, அவர் யாருக்காக உழைத்தாரோ, அவர்கள் குடும்பத்தினரே கூட புறக்கணிக்கும் ஒரு அவல நிலை ஏற்படும். அந்த நிலையில்தான் இப்போது இருக்கிறார்

 Actress Jayakumari

   

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி. சிறுநீரகங்கள் பழுதான நிலையில், மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நடிகை ஜெயக்குமாரி ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் பிறந்தது பெங்களூருவில் என்றாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில்தான். 9ம் வகுப்பு வரை தான் படித்திருப்பேன். நடனத்தில் அதிக ஆர்வம் இருந்ததால், படிப்பில் விருப்பமில்லை.

   

 Actress Jayakumari

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றவர்களின் படங்களிலும் நடித்திருக்கிறேன். கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறேன். என்னை கமல் அக்கா என்றுதான் அழைப்பார். அக்கா என்று அழைத்த அவரிடம் சென்று உதவி கேட்கக் கூடாது என்ற சுய மரியாதையுடன் இப்போது வறுமையிலும் கஷ்டப்படுகிறேன். ஒரு காலத்தில், நிறைய படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதித்தேன். ஆனால், ஒரு படம் தயாரித்து அனைத்து பணத்தையும் இழந்து விட்டேன். அந்த வேதனையில் என் கணவர் மனம் உடைந்து போய், சில ஆண்டுகளில் இறந்து விட்டார்.

 Actress Jayakumari

எனக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூவருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஆனால் என்னை கவனித்துக்கொள்ள என் மருமகள்கள் விரும்பாததால், நானே வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். எனக்கு 72 வயதாகிறது. நானேதான் வந்து இந்த மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். தனிமையில்தான் இருக்கிறேன். யாருடைய ஆதரவும் எனக்கு இல்லை. யாரிடமும் சென்று உதவிக்காக நிற்கவும் நான் விரும்பவில்லை, என்று கூறியிருக்கிறார் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி.