உலகநாயகன் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். கடந்த 1987-ஆம் ஆண்டு மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் நாயகன் படம் ரிலீஸ் ஆனது. நாயகன் திரைப்படத்திற்கு பிறகு சுமார் 27 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனும் மணிரத்தினமும் தக் லைஃப் படத்தில் இணைந்து உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் த்ரிஷா, அபிராமி, கௌதம் கார்த்திக், சிம்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தக் லைஃப் படத்தை தயாரிக்கிறது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் இருந்து விலகி விட்டனர்.

இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்போது நடிகர் சிம்பு மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கு இடையேயான காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிம்புவை மணிரத்தினம் உடல் எடையை குறைக்க சொன்னாராம். ஆனால் அளவுக்கு அதிகமாக சிம்பு உடல் எடையை குறைத்து விட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணிரத்தினம் போதும் இதோட நிப்பாட்டிக்கோங்க. இதுக்கு மேல உடல் எடையை குறைக்க வேண்டாம் என கூறிவிட்டாராம். மணிரத்தினம் சொன்னதை காட்டிலும் மிகவும் சின்சியராக இருந்து சிம்பு உடல் எடையை குறைத்துள்ளார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் படத்தின் ஷூட்டிங் முடிந்து விடும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

