இயக்குனர் நித்திலன் குரங்கு பொம்மை படம் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சுமார் 8 வருட இடைவெளிக்கு பிறகு முன்னணி நடிகரான விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா படத்தை இயக்கினார். இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகாராஜா படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் ரீதியாகவும் படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் அவர் சோலோவாக நடித்து வெற்றிக்கனியை எட்டி பறித்துள்ளார். மகாராஜா படம் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது. கடந்த வாரம் மகாராஜா படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
மகாராஜா படத்தை பார்த்த பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தளபதி விஜய் மகாராஜா படத்தை பார்த்து அசந்து போனாராம். அவர் இயக்குனர் நித்திலணையும் படத்தின் தயாரிப்பாளரையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை நித்திலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி விஜய் அண்ணா. மகாராஜா படம் குறித்த பல விஷயங்களை மிகவும் ஆராய்ந்து நீங்கள் பேசியது என்னை நெகிழ வைத்துவிட்டது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram