இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த நிலையில் இவருடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நாயகன் படத்திற்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்தினம் கூட்டணி அமைந்த நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான நிலையில் கர்நாடகாவில் படம் வெளியாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. பல தடைகளுக்குப் பிறகு இந்த திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. படம் ட்ரோல் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இப்படியான நிலையில் தான் நேற்று, ” எங்கள் இருவரிடம் இருந்து இன்னொரு நாயகன் படம் எதிர்பார்த்தவர்களுக்கு, நான் சொல்வது ஒன்று தான், எங்களை மன்னித்து விடுங்கள்.
நாங்கள் முற்றிலும் வேறு ஒன்றை செய்ய விரும்பினோம். ஓவர் எதிர்பார்ப்பு என்பதை தாண்டி இது வேறு விதமான expectation” என மணிரத்தினம் மன்னிப்பு கேட்டது போல தகவல் வெளியானது. இந்நிலையில் தக் லைப் பட விவகாரத்தில் இயக்குனர் மணிரத்தினம் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்பதால் அவர் மன்னிப்பு கேட்டதாக பரவி வரும் தகவல் தவறானது என்று மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஹாலா தாலுகாவிற்குட்பட்ட சாத்வே கிராமத்தில் விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசிக்கும்…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…